Wednesday, December 16, 2009

சூப்பர் ஸ்டார் பட்டத்தை ரஜினியிடமிருந்துவாங்கி விடுவார் விஜய்?




ஐம்பது படங்கள் கூட முழுமையாக நடிக்கவில்லை ஆனால் விஜய் கொடுக்கும் அலப்பறைக்கு அளவே இல்லை . தன்னை சூப்பர் ஸ்டார் என்று சொல்லிகொள்வது . ஏறி வந்த ஏணியை எட்டி உதைப்பதில் இவருக்கு இணை யாரும் இல்லை . ஐந்து வருடங்களுக்கு முன்பு விஜயகாந்த் இவரது தலைவர் நான் செந்தூரபாண்டி தம்பி என்று சொல்லி வளர்ந்தார் . கிராமங்களில் ஐந்து ஆண்டுகளுக்கு முன் ரஜினிக்கு அடுத்து விஜயகாந்த் தான் மாஸ் . யாருக்கும் தெரியாத விஜய் யை அடையாளம் காட்டியது செந்தூரபாண்டி .

அதன் பிறகு அவரை மறந்து ரஜினி தான் ஏன் தலைவர் . , பிரியமானவளே கில்லி, என்று ரீமேக் படங்கள் , மதுரை , திருப்பாச்சி போன்றவை வெற்றி பெற்றதும் எனது தலைவர் எம்.ஜி .ஆர் அதனுடன் சேர்ந்து லயோலா கல்லூரி கருத்துகணிப்பில் எப்படியோ தமிழில் பிடித்த நடிகர் என சில புள்ளி வித்தியாசம் பெற்றுவிட்டு தன்னிடம் வந்த ரஜினி ரசிகர்களிடமும் தன் சுய ரூபத்தை காட்டினார் . கீழே உள்ள வீடியோ பாருங்கள் புரியும் .

அவரது திருப்பாச்சி வெற்றி பெற்றது தமிழ் சூப்பர் ஸ்டார் என்று சொல்லி பேட்டி எடுப்பதையும் அவரது பதிலையும் அழகிய தமிழ் மகன் படத்திற்கு ...முடிவு நமக்கு தெரிந்ததுதான் ..




ஏற்கனவே பாபா கொஞ்சம் ஹிட் ஆகாததால் சச்சின் படத்தை சந்திரமுகி போட்டியாக வெளியிட்டு அப்போதே சூப்பர் ஸ்டார் பட்டத்தை ரஜினியிடமிருந்து தாணு வாங்கி தந்துவிடுவார் என்ற நம்பிக்கையும் வேறு படம் ரிலீஸ் ஆனபோது தாணுவின் பணபலம் மற்றும் மீடியாக்கள் சந்திரமுகி சுமார் சச்சின் சூப்பர் என்று விமர்சித்தது நினைவிருக்கலாம் .கூடுதாலாக ஜெயா டிவி சந்திரமுகி தனக்கு கிடைக்காததால் மோசமாக விமர்சித்து மூன்றாம் இடமே கூடவே மும்பை எக்ஸ்பிரஸ் வந்தது .

இவளவையும் தாண்டி அமைதியாக ராட்சத வெற்றி பெற்றது சந்திரமுகி .இவ்வளவு நல்ல மனம் படைத்தவர் இளைய தளபதி . இத்தனை அடுத்து தளபதி என்ற பெயரில் எவ்வளவுநாள் தான் அப்படியே இருப்பது தளபதி ஆகவேண்டாமா ?
கதைதான் புதிதாக தேவை இல்லை தலைப்பும் கூடவா. அப்படியே மன்னன் ,எஜமான் ..என்று எந்திரன் வரை வைத்து மீண்டும் ரஜினி ரசிகர்களை ஏமாற்ற தொடங்குங்கள் .

அஜித் உடன் போட்டி போட்டு எஸ்.எம்.எஸ் அனுப்பி அவரது ரசிகர்களை காயபடுத்தி னீர்கள் அடுத்து சூப்பர் ஸ்டார் என்று சொல்லி லயோலா புண்ணியத்தால் உங்களை சர்தார்ஜி பரிதாபப்படும் அளவுக்கு இன்று வரை எஸ்.எம்.எஸ் மன்னன் ஆகிவிட்டீர்கள் .

இன்னும் வேட்டைக்காரன் ரிலீஸ் நெருங்க நெருங்க மொபைல் பார்க்கவே கொடுமையாக இருக்கிறது . விஜய் ரசிகர்களே ரசிக்கும் அளவுக்கு மாறிவிட்டது.

விஜய் போல நடிக்கிறார் என்று சொன்னதும் விஷால் படத்தை ஓட்ட ஆரம்பித்து விடீர்கள் .

ஐம்பது படம் கூட முடிக்காத விஜய் இளைய தளபதி சூப்பர் ஸ்டார் என்று சொல்லும் போது விஷால் தன்னை புரட்சி தளபதி என்று போட்டால் என்ன தவறு அதை ஏன் பொறுத்துக்கொள்ள முடியவில்லை .

விஜய் ஆரம்ப படங்களைவிட விஷால் படங்கள் ஆயிரம் மடங்கு நன்றாக உள்ளது கடைசி இரண்டு படங்கள் ஹிட் ஆகி இருந்தால் விஜய் இடம் காலி ஆகி இருக்கும் .

சூர்யா ஒவ்வொரு படத்திலும் ரசிகர்களை அதிகரித்து வருகிறார் வித்தியாச நடிப்பால் , அஜித் அவ்வப்போது வித்தியாசமாக நடித்து நிலையாக இருக்கிறார் விக்ரம் இப்போது வருடத்திற்கு இரண்டு படங்கள் கொடுக்க நினைக்கிறார் தனுஷ் , ஜெயம் ரவி என்று வெற்றி கணக்கை தொடங்கி விட்டனர் .

முதலில் நல்ல கதைகளில் பத்ரி ,பிரியமானவளே போன்று எல்லோர் மனதில் இடம் பிடிக்கும் நிலைக்கு வந்தால் தான் விஜய் படங்களை ரசிக்கலாம் . இல்லாவிட்டால் குருவி ,வில்லு நிலைதான் .

உங்கள் அன்பு தொண்டன் சத்யராஜ் போல் நடித்து கொண்டு இருக்கவேண்டியதுதான் .


வேட்டைக்காரன் ஆடியோ வெளியீட்டு விழாவில் அமைதியாக நடித்தது போல் இருக்கவேண்டியதுதான் ...ரஜினி உங்கள் விழாவிற்கு எப்படி அழைப்பீர்கள் .

விஜயகாந்த் ,ரஜினி போன்ற வர்களின் புகழ் பாடி அவரை மதிக்காத விஜய்க்கு
இது புரிந்திருந்தால் இன்னமும் தான் தான் மாஸ் என்று இன்னமும் தொடர்ந்திருக்கமாட்டார் வேட்டைக்காரனில் . சன் டிவி வளர்த்து விட்டதை மறந்து இன்று அவர்களே வெறுத்து ஒதுக்கும் நிலையில் தான் உள்ளார் .


இன்னமும் கண்மூடித்தனமாக எல்லாம் தெரிந்து அவரின் படங்களை முதல் நாளே பார்க்க துடிக்கும் படித்த இளைஞர்கள் இப்போது தான் சிந்திக்க தொடங்கியிருக்கிறார்கள் நிச்சயம் மாறுதல்வரும்.

அதையும் தாண்டி முதல் காட்சிக்கு செல்வதை பெருமையாக சொல்லு இளைஞர்களை இன்னும் கொஞ்சம் தெரிந்தால் தான் உணர்வீர்கள் என்னை போல என்று தான் சொல்லவேண்டும் .


தனக்கு பிடித்த தலைவன் தன்னை உயர்த்த உதவியவர்கள் வெறுக்கும் நிலையில் இருந்தால் எவருக்குத்தான் பிடிக்கும் .


நான் எதோ விஜய் ரசிகர்களை காயப்படுத்த எழுதவில்லை ஏனென்றால் சச்சின் படம் வரும்வரை அவரது படங்களை முதல்காட்சி பார்த்த உங்களைவிட தீவிர விஜய் ரசிகன் . நன்றி : லயோலா கருத்துகணிப்பு , சச்சின் திரைப்படம்

நான் உணர்ந்ததை உங்களுக்கு சொல்ல விரும்பினேன் , இப்போதெல்லாம் சூர்யா , தனுஷ் ,ரவி போன்றவர்கள் தான் ரஜினி ,கமல் படங்கள் இல்லாதபோது எனது விருப்பம் .

நீங்களே சொல்லுங்கள் இப்படி ஒரு தலைவர் நமக்கு வேண்டுமா?

3 comments:

  1. i like vijay pictures but now i hate vijay charcter vice don>t like it now i AM WATCH SURYA DIFF CHARACTERS I HATE VIJAY MOVIES

    ReplyDelete
  2. i read the same content in another blog, did you copy? very bad!!!!!

    ReplyDelete
  3. விஷால் படங்கள் கடைசி இரண்டும் ஹிட் ஆகி இருந்தால் நிலைமை தலை கீழ்! அதே போல் விக்ரம் இரண்டு வருஷத்துக்கு ஒரு படம் என்று போய் விட்டதால் லைன் கிளியர் ஆகிவிட்டது. சூர்யா படத்துக்கு படம் ரசிகர்கள் அதிகம் ஆகி வருகீறார்கள். இதில் விசேஷம் என்ன வென்றால் பல விஜய் ரசிகைகள் சூர்யாவுக்கு மாறி வருகிறார்கள். deala no deala வேட்டைகரனை தியேட்டர் போய் பார்க்க கட்டாயப் படுத்துகிறது சன் குழமம். பாவம் விஜய்.

    ReplyDelete